
சுற்றுவட்டார செய்திகள்
அம்மாண்டிவிளை புனித ஜான்ஸ் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது
அம்மாண்டிவிளை புனித ஜான்ஸ் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது
22-01-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. திருவிழாவில் தமிழ்த்துறை பேராசிரியை ஒபிலியா தலைமை தாங்கினார்.
பொங்கல் விழாவில் மாணவ, மாணவியர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் படையல் போட்டிகளில் பங்குபெற்றனர். போட்டிகளுக்கு நடுவர்களாக உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் சி.புஷ்பராஜ், காவல்துறை அறிவியல் பேராசிரியர் ஆர்.சதீஷ்குமார் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் மேரி ஆரோக்கிய சலூஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
போட்டியில் முதல் பரிசு கணினி பயன்பாட்டு துறைக்கும், இரண்டாம் பரிசு கணிதவியல் துறைக்கும், மூன்றாம் பரிசு மேலாண்மைத்துறைக்கும் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர், ஆசிரியைகள் ஒருங்கிணைத்து மாணவ, மாணவிகளின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடத்தினர்.
0 Comments: