
Manavai News
மணவாளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 69 பேர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 69 பேர் மீது வழக்கு
13-01-2015
குருந்தன்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் மதமோதல்களை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வரும் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மணவாளக்குறிச்சி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
போலீசார் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 69 பேர் மீது மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
0 Comments: