சுற்றுவட்டார செய்திகள்
கடியப்பட்டணம் புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருவிழா தொடங்கியது
கடியப்பட்டணம் புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருவிழா தொடங்கியது
30-12-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருவிழா இன்று தொடங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து பால் பொங்கல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 3 மணிக்கு குறும்பனை ஆலயவளாகத்தில் இருந்து ஜோதி ஓட்டமும், மாலை 6 மணிக்கு ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெறுகிறது. கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். 31-ம் தேதி விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி நடக்கிறது.
3-ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி, முட்டம் மண்டல குருக்கள் தலைமையேற்று மறைவுரை நிகழ்த்துகிறார். 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை ஆதாரதனை நிகழ்ச்சியும், 5-ம் தேதி மாலை 6 மணிக்கு பங்குதந்தையரின் வகுப்பு தோழர்கள் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்கள். 6-ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் ஆன்றனி பாபுசாமி மறையுரை நிகழ்த்துகிறார்.
7-ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி, 8-ம் தேதி மாலை 6 மணிக்கு மண்ணின் மைந்தர்கள் தலைமையேற்று மறையுரை நிகழ்ச்சியும், 9-ம் தேதி ஜெரோமியாஸ் தலைமையில் மறையுரையும், இரவு 9 மணிக்கு இன்னிசை விருந்தும் நடக்கிறது.
10-ம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு நற்கருணை நிகழ்வும், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கையும் நடைபெறுகிறது. 11-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை லெட்சுமணன் சுருதி வழங்கும் மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்குதந்தையர்கள், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
0 Comments: