Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் ஓடைக்குள் பாய்ந்தது: 15 பேர் காயம்

மணவாளக்குறிச்சி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் ஓடைக்குள் பாய்ந்தது: 15 பேர் காயம்

மணவாளக்குறிச்சி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் ஓடைக்குள் பாய்ந்தது: 15 பேர் காயம்
27-12-2014
குளச்சலில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பேருந்து வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியில் வந்தபோது பஸ்சில் ஆக்சில் கட்டாகி பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் சத்தம் போட்டு அலறினார்கள். சிறிது தூரம் ஓடிய பஸ் ரோட்டோரம் நின்ற மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். ஒரு பெண் மயக்கம் அடைந்தார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். பஸ் மோதிய வேகத்தில் மின் கம்பம் உடைந்து மின்சாரமும் தடைபட்டது. மின்சாரம் தடைபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: