Announcements
மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மரணம்
மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மரணம்
27-06-2014
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பீர் முஹம்மது (வயது 59). இவர் கன்னியாகுமரி மாவட்ட நீதிபதியின் ஓட்டுனராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் வசித்து வந்த இவர் சில நாட்களாக நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணி அளவில் மருத்துவமனையில் வைத்து இறந்தார். பின்னர் இவருடைய உடல் நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு, அவருடன் பணிபுரிந்த அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் மையவாடியில் வைத்து அரவது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 Comments: