District News
குறும்பனை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் வீடுகள் இடியும் அபாயம்
குறும்பனை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் வீடுகள் இடியும் அபாயம்
19-05-2014
குளச்சல் பகுதியில், கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பியதால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அலைகளின் ஆக்ரோஷத்தால் அலை தடுப்புச்சுவரும் சேத மடைந்தது.
கடந்த 9–ம் தேதி கீழ குறும்பனை மீனவ கிராமத்தில் கடல் அலையால் அரிப்பு ஏற்பட்டதில் புறேத்தாஸ் என்பவரது வீட்டின் தெற்கு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.
இதுபோல கடல் அலைகள் சீற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும், கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உருவானது.
கடற்கரையொட்டி உள்ள வீடுகளுக்கும் கடல் அலையினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பீதிக்கு ஆளானார்கள். அலையின் சீற்றத்தால் வீடுகளுக்கு பாதிப்பு வருவதோடு சாலைகளும் நாசமாகும் நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட கலெக்டர் மற்றும் நாகர்கோவில் பொதுப்பணித்துறை கடலரிப்பு கோட்ட அதிகாரிகள் கீழ குறும்பனை மீனவ கடலோர கிராமத்தை பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் கடற்கரை பகுதியில் கடலரிப்பு ஏற்படும் இடங்களில் கற்களை போட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நல்வாழ்வுக்கழக தலைவர் மரியக்கண், பொருளாளர் கலிஸ்ட் கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளனர்.
0 Comments: