District News
பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவி மிருனாளினி
பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவி மிருனாளினி
11-05-2014
பிளஸ்–2 தேர்வில் குமரி மாவட்டத்தில் முதல் இடத்தை மாணவி மிருனாளினி பெற்று உள்ளார். இவர் மொத்தம் 1188 மார்க் பெற்று உள்ளார்.
தமிழ்–192, ஆங்கிலம்–196, கணிதம்–200, இயற்பியல்–200, வேதியியல்–200, உயிரியியல்–200 மதிப்பெண் பெற்று உள்ளார். மாணவி மிருனாளினி இருளப்பபுரம் ஹெப்ரான் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
மாவட்டத்தில் முதல் இடம் பெற்றது பற்றி மாணவி மிருனாளினி கூறியதாவது:–
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். அதன்படி அந்த பாடங்களில் 200 மதிப்பெண் பெற்று உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
எனது தாத்தா சிவசுப்பிரமணியனுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. அவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவரது கனவை, ஆசையை நிறைவேற்றும் வகையில் நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன். எனது தாய் மாமா ஜெயமுருகன் டாக்டராக உள்ளார். எனவே நான் டாக்டராக வேண்டும் என்பது தாய், தந்தையின் ஆசையாகவும் இருந்தது. அவர்களது ஆசையும் நான் நிறைவேற்றுவேன், என்று கூறினார்.
0 Comments: