
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சியில் கவுன்சிலர் மீது தாக்குதல்: அதிமுக செயலாளர் மீது வழக்கு பதிவு
மணவாளக்குறிச்சியில் கவுன்சிலர் மீது தாக்குதல்: அதிமுக செயலாளர் மீது வழக்கு பதிவு
18-04-2014
மணவாளக்குறிச்சி பேரூராட்சி அதிமுக வார்டு கவுன்சிலராக இருப்பவர் அப்துல் சலாம் (வயது 53). இவர் மணவாளக்குறிச்சி ஆறான்விளை என்ற பகுதியில் வசிக்கிறார்.
இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிமுக சார்பில் தேர்தல் பணி செய்து கொண்டிருந்த போது மணவாளக்குறிச்சி பேரூர் அதிமுக செயலாளரான தட்டான்விளை பகுதியை சேர்ந்த கண்ணதாசன் அங்கு வந்தார். அவர், அப்துல் சலாமை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி, காலால் மிதித்து கொலை மிரட்டல் விடுத்ததாக அப்துல் சலாம் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
Thanks to “Dailythanthi”
0 Comments: