Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி பேராசிரியை – மாணவி காதலர்களுடன் போலீசில் தஞ்சம்

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி பேராசிரியை – மாணவி காதலர்களுடன் போலீசில் தஞ்சம்

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி பேராசிரியை – மாணவி 
காதலர்களுடன் போலீசில் தஞ்சம்
23-12-2013
மணவாளக்குறிச்சியை அடுத்த சரல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் அனிதாகுமாரி (வயது 25). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16–ந் தேதி கல்லூரிக்கு சென்ற அனிதாகுமாரி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர்.

எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பொன்னுசாமி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பேராசிரியை அனிதாகுமாரியை தேடி வந்தனர். இந்தநிலையில் 19-ம் தேதி அன்று அவர் தக்கலை பேலஸ் ரோட்டைச் சேர்ந்த பிரசாத் என்ற வாலிபருடன் வெள்ளிச்சந்தை போலீசில் தஞ்சம் அடைந்தார். 
போலீசாரிடம் அவர் பிரசாத்தும், தானும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கடந்த 16–ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அனிதாகுமாரியின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது அனிதாகுமாரி பெற்றோருடன் செல்ல மறுத்து காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார்.

இதையடுத்து போலீசார் அனிதாகுமாரியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர். அனிதாகுமாரியின் புகாரை முடித்து வைத்ததும் அதே போலீஸ்நிலையத்துக்கு இன்னொரு காதல் ஜோடி தஞ்சம் அடைய வந்தனர். அவர்களின் பெயர் ஜெரால்டு ரூடால் (வயது 24). அவரது காதலன் கிருஷ்ணா. இவர்களில் ஜெரால்டு ரூடால் ஏற்கனவே காதலனுடன் தஞ்சம் அடைந்த அனிதாகுமாரி வேலை பார்த்த கல்லூரியில் எம்.இ. படித்து வந்தார். இவரும் கடந்த 15–ந் தேதி முதல் மாயமாகி இருந்தார். இவரது பெற்றோரும் மகளை காணவில்லை என வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்திருந்தனர்.

போலீசார் அவரை தேடி வந்தநிலையில் 19-ம் தேதி அன்று மாணவி ஜெரால்டு ரூடால்டும் காதலன் கிருஷ்ணா என்பவருடன் போலீசில் ஆஜராகி இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களை சேர்த்து வைக்கும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் அவர்களை சேர்ந்து வாழ வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: