Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே ராட்சத அலையில் சிக்கி கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் சாவு

மணவாளக்குறிச்சி அருகே ராட்சத அலையில் சிக்கி கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் சாவு

மணவாளக்குறிச்சி அருகே ராட்சத அலையில் சிக்கி 
கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் சாவு
10-12-2013
மணவாளக்குறிச்சியை அடுத்த சின்னவிளை கடலோர கிராமத்தை சேர்ந்தவர் தார்த்தீஸ் (வயது 65). மீனவர். கட்டுமரத்தில் சென்று மீன் பிடி தொழில் செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன்பு இரவு 8.30 மணிக்கு கட்டு மரத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது ராட்சத அலையில் தார்த்தீஸ் சென்ற கட்டுமரம் சிக்கி கடலில் கவிழ்ந்தது.

இதை கண்ட ஒருவர் தார்த்தீசின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கடற்கரைக்கு விரைந்து வந்து தார்த்தீசை தேடினர்.
இந்நிலையில் இரவு 10 மணியளவில் தார்த்தீசின் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து அவரது மகன் ஜாய்ஸ், குளச்சல் கடலோர போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். சப்– இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: