Manavai News
மணவாளக்குறிச்சியில் குளச்சல்-நாகர்கோவில் பழுதடைந்த நெடுஞ்சாலையை கண்டித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடந்தது
மணவாளக்குறிச்சியில் குளச்சல்-நாகர்கோவில் பழுதடைந்த நெடுஞ்சாலையை கண்டித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடந்தது
25-11-2013
மணவாளக்குறிச்சியில் குளச்சல் – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள குண்டு குழிகளை நிரப்பாத மாநில நெடுஞ்சாலை துறையை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் (இன்று 25-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த கண்டன போராட்டத்திற்கு மணவாளக்குறிச்சி பேரூர் கழக பொறுப்பாளர் நவாஸ்கான் தலைமை தாங்கினார். பேரூர் கழக பொருளாளர் முபீன் வரவேற்புரை வழங்கினார். கண்டன உரையை குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெகநாதன் துவங்கி வைத்தார்.
குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் கவாஸ்கர், பேரூர் அவைத்தலைவர் சேவியர், பேரூர் துணை செயாளர் பகர்தீன், மணிகண்டன், செய்யது, அலெக்சாண்டர், சேக்முகம்மது, ரீட்டா, ஜெயசுந்தரம், நிலோபர் நிஷா, ஜெயபிரபாகர், ஜேம்ஸ் மார்ஷல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குண்டும்குழியுமான சாலை |
போராட்டத்தில் பழுதடைந்த சாலையை சீர்செய்யாத மாநில நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
0 Comments: