Other News
கால்பந்து போட்டியில் பதக்கங்களை குவிக்கும் ஏழை மாணவர்
கால்பந்து போட்டியில் பதக்கங்களை குவிக்கும் ஏழை மாணவர்
22-09-2013
மாநில அளவில் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை மாணவர் ஒருவர் பதக்கங்களை குவித்து வருகிறார். தற்போது மலேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்ததால் பல நல்உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்.
ஊட்டி மலை மாவட்டத்தில் உள்ள உல்லாடா என்ற சிறிய மலை கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சபரீஷ். இவருடைய தந்தை காமராஜ். சபரீஷ் தற்போது ஊட்டியில் உள்ள என்.எஸ். அய்யா மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடையை சாதனைகளை காணலாம்.
சபரீஷ் 6 வயதில் கால்பந்து விளையாட்டில் மாற்று வீரராக 2004-ம் ஆண்டு மே மாதம் களம் இறங்கினார். 13 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் மாநில அளவில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் களமிறங்கினார்.
கால்பந்து டென்னீஸ் போட்டியில் தேசிய அளவில் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். கால்பந்து டென்னீஸ் போட்டியில் மகராஷ்டிரா சோலாக்பூரில் நடந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடமும், வெள்ளி பதக்கமும் தட்டி சென்றார். இது 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.
கால்பந்து டென்னீஸ் போட்டியில் நெய்வேலியில் நடந்த 13 வயதிற்குப்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடமும், ஒற்றையர் பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார். பள்ளியின் வாயிலாக கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளார். பல ஊர்களில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
புதியபுயல் பத்திரிகையின் இளம் சாதனையாளருக்கான விருதை பெற்றுள்ளார். இதுவரை 20 மேற்பட்ட பதக்கங்களையும், 15 கோப்பைகளையும், 4 பெரிய சீல்டுகளையும் பெற்று இவருடைய பள்ளிக்கு பெருமை சேர்த்ததுடன், இவருடைய மலைவாழ் பழங்குடி இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சாதனைகள் பல நிகழத்தினாலும் ஏழ்மை சூழ்நிலையில் சபரீஷ் காணப்படுகிறார். மலேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான செலவுகளுக்காக பலரை எதிர்பார்த்து காத்திருக்கிறார். விருப்பம் உள்ளவர்கள் சபரீசின் தந்தையின் அலைபேசி எண் +91 9843889215 தொடர்பு கொள்ளவும்.
0 Comments: