
District News
Manavai News
வழுதலம்பள்ளத்தில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக நாகர்கோவிலுக்கு பஸ்போக்குவரத்து அமைச்சர் பச்சைமால் துவங்கி வைத்தார்
வழுதலம்பள்ளத்தில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக
நாகர்கோவிலுக்கு பஸ்போக்குவரத்து
அமைச்சர் பச்சைமால் துவங்கி வைத்தார்
25-07-2013
குளச்சல் அருகே உள்ள வழுதலம்பள்ளத்தில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக நாகர்கோவிலுக்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. இந்த தினமும் 4 முறை வந்து செல்லும்.
வழுதலம்பள்ளத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, இராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும். இந்த பஸ் போக்குவரத்து தொடக்க விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் கலந்து கொண்டு, புதிய பஸ்சை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சமீபத்தில் நாகர்கோவிலில் இருந்து சூரங்குடி, ஈத்தாமொழி, இராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி வழியாக குளச்சலுக்கு ஒரு பஸ்சும், கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக மணவாளக்குறிச்சி, குளச்சல், நித்திரவிளை, புதுக்கடை, பழைய உச்சக்கடை, பூவார் வழியாக களியக்காவிளைக்கு இரு பஸ்களும் விடப்பட்டன.
0 Comments: