
வங்கிகளே கடனுக்கான வட்டியை குறையுங்கள்
12-07-2013
வங்கிகள் பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்டவைகளாகும்.விவசாயம்,தொழில்,கல்வி,ஏற்றுமதி போன்ற மக்களின் அன்றாட தேவைகளுக்கான பணங்களை பட்டுவாடா செய்வது வங்கிகளின் கடமையாகும். பொதுமக்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைக்க வங்கிகளில் சேமித்து வருகின்றனர்.

கடுமையான விலைவாசி உயர்வும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகவும் சரிவடைந்து
(60.24) வரும் இவ்வேளையில், அதிகப்படியான பணத்தை கொடுத்துதான் எந்தப்பொருளையும் வாங்க வேண்டிய கட்டாய நிலையில் மக்கள் உள்ளனர். ஆகவே வீட்டுக்கடன் முதலான எந்தக்கடனும் அதிகமாக வாங்கினால்தான் பொதுமக்களின் தேவையும் பூர்த்தியடையும்.
எனவே பாரத ரிசர்வ் வங்கி அனைத்து கடனுக்கான வட்டியையும் (6%)ஆறு சதவீதமாக குறைக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடவேண்டும். தேசத்தின் நலனிலும்,மக்கள் நலனிலும் மத்திய அரசு உண்மையான அக்கரை எடுத்து வங்கிகளின் கடனுக்கான வட்டியை 6 சதவீதமாக குறைத்து ரூபாயின் மதிப்பு சரிவடைவதை உடனடி தடுத்து நிறுத்தி, பொருளாதார வீழ்ச்சியடையும் நம் நாட்டை வீழ்ச்சியிலிருந்து தூக்கி நிறுத்த ஆவன செய்யுமாறு விக்டரி கட்சி சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
0 Comments: