
District News
குமரிக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்ய கோரிக்கை
குமரிக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்ய கோரிக்கை
02-07-2013
![]() |
Nagercoil Railway Station |
ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையில் குமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் செயலாளர் எட்வர்ட் ஜெனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
கடந்த பெப்ரவரி மாதம் தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் கன்னியாகுமரியிலிருந்து மைலாடுதுறை வழியாக புதுச்சேரிக்கு வாராந்திர ரயில் மற்றும் நாகர்கோவிலிருந்து நாமக்கல் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் கால அட்டவணை நேற்று மாலை சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்த ரயில்கால அட்டவணையில் நாகர்கோவில் - பெங்களூர் 17235/17236 எண் கொண்ட தினசரி ரயில் நாகர்கோவிலிருந்து மாலை 16:25 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் இரவு 12:16 மணிக்கு சென்று பெங்களுருக்கு காலையில் 09:05 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கம் பெங்களுரிலிருந்து மாலை 17:00மணிக்கு புறப்பட்டு ஒசூர், நாமக்கல் வழியாக பயணித்து நாமக்கல்க்கு இரவு 23:15 மணிக்கு வந்து நாகர்கோவிலுக்கு காலையில் 07:50 மணிக்கு வந்து செருகிறது.
இந்த ரயில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்றும், இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளும், ஒன்பது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும், ஐந்து முன்பதிவில்லாத பெட்டிகள் என மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கபட இருக்கிறது. இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுகல், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், பெங்களூர் கண்டோமன்ட் போன்ற ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலின் காலஅட்டவணை பெங்களூருக்கு காலையில் 09:05 மணிக்கு செல்லும் படியாக அமைக்கப்ட்டுள்ளதால் பெங்களூரில் பணிபுரிந்து வரும் குமரி மாவட்ட பயணிகளுக்கு அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் அரைநாள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இந்த ரயில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு காலையில் 7:00 மணிக்கு செல்லுமாறு கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கிறது.
பட்ஜெட்டில் அறிவித்த கன்னியாகுமரி – புதுச்சேரி 16861ஃ16862 எண் கொண்ட வாராந்திர ரயில் புனித இடங்களான கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புகோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மைலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருப்படையூர், விழுப்புரம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று நேரடியாக ரயில் மூலமாக இணைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து வெள்ளிகிழமை மதியம் 13:35 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலையில் 05:25 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறது.
மறுமார்க்கம் புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை மதியம் 11:30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு அதிகாலை 03:15 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்றும், இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளும், ஐந்து இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும், எட்டு முன்பதிவில்லாத பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கபட இருக்கிறது. இந்த ரயில் பகல்நேர ரயிலும் இரவு நேர ரயிலும் இல்லாமல் இரண்டாங் கட்ட ரயிலாக இயங்குமாறு கால அட்டவணை அமைக்கப்ட்டுள்ளது. இவ்வாறு இயக்குவதால் குமரி மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை. ரயில்வே அதிகாரிகள் இவ்வாறு மோசமான கால அட்டவணை அமைத்து இயக்குவதால் இந்த ரயில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு கால அட்டவணை அமைத்து இயக்குவதால் இந்த ரயிலின் சேவையை தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை வைக்கும் போது நஷ்டத்தில் இயங்குவதால் தினசரி ரயிலாக இயக்க முடியாது என்று எளிதாக சப்பை காரணம் காட்டி விட்டு இயக்க முடியாது என்று கூறிவிடலாம் என்ற காரணத்தாலேயே இவ்வாறு கால அட்டவணை அமைக்கப்ட்டுள்ளது. ஆகவே இந்த ரயிலின் கால அட்டவணையை கன்னியாகுமரியிலிருந்து இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு காலையில் 8:00 மணிக்கு போய் சேருமாறும் மறுமார்க்கம் புதுச்சேரியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி காலையில் 6:00மணிக்கு வந்து சேருமாறு ரயில்கால அட்டவணை அமைக்குமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்குவதால் குமரி மாவட்ட பயணிகள் டெல்டா பகுதியில் உள்ள ஆறு மாவட்ட பகுதிகளுக்கு செல்ல இரவு நேர ரயில் வசதி கிடைத்து ரயில்வே துறைக்கும் அதிக அளவு வருவாய் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
0 Comments: