
500 பேரை மீட்ட ராணுவ தளபதி
02-07-2013
உத்தரகாண்ட மாநில மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 500 பேர் பத்திரினாத்தில் உள்ள பண்டு கேஸ்வர் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலை காரணமாகவும்சாலை சேதமானதாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மீட்கமுடியவில்லை.
இந்நிலையில் ராணுவ தளபதி திரு. அனில் சாய்ட் மற்றும் அவரது குழுவினர் சுமார் 50 கிலோ மீட்டர் நடந்து அவர்கள் தங்கி இருக்கும் முகாமிற்கு சென்றனர். அதன் பிறகு பண்டுகேஷ்வர் முகாமில் இருந்து கோவிந்த் காட் முகாமிற்கு சாலை வசதி இருக்கும் இடத்தில் வாகனத்திலும், வனப்பகுதியில் நடந்தும், அனைவரையும் உற்சாகப்படுத்தி, 500 பேரையும் மீட்டு வந்துள்ளனர்.
மீட்கப்பட்டவார்கள் அனைவரும், ராணுவ வீரர்களின் உற்சாகத்தினால்தான் நாங்கள் தப்பி வந்தோம் என்று கூறி உள்ளனர்.
தீவிரவாதிகளிடம் போரிடுவதில் மட்டும் ஈடுபடாமல், மீட்புப் படையிலும் சேர்த்து 500 பேரை பத்திரமாக மீட்ட ராணுவ தளபதி திரு. அனில் சாய்ட் அவர்களுக்கும், கூட இருந்து உதவிகள் புரிந்த மற்ற ராணுவ வீரர்களுக்கும் விக்டரி கட்சி சார்பாக நன்றி கலந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். சபாஸ் ராணுவ வீரர்களே சபாஸ் தொடரட்டும் உங்கள் சேவையுடன் கூடிய மக்கள் பணி.
நன்றி வெல்க ராணுவ சேவை.
இந்திய மக்கள் நலப்பணியில்
என்றென்றும் மகிழ்வுடன்.
ஸ்ரீஹரி
0 Comments: