
Manavai News
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
19-06-2013
மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
செயல் அலுவலர் ராமசாமி பிள்ளை முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் சகாயராஜன், அப்துல் சலாம், ஆஸ்டின், புஷ்கலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி சின்னவிளை, கடற்கரை சாலை, ஆறான்விளை வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
0 Comments: