
District News
Special News
சாகித்திய அகாடமி விருதுபெற்ற பெண் எழுத்தாளருக்கு பாராட்டு விழா
சாகித்திய அகாடமி விருதுபெற்ற பெண் எழுத்தாளருக்கு
பாராட்டு விழா
18-03-2013
கன்னியாகுமரி மாவட்ட பெண் எழுத்தாளர் மலர்வதி எழுதிய “தூப்புக்காரி” என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து எழுத்தாளர் மலர்வதிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சாமியார்மடத்தில் வைத்து பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில் வங்கி மேலாளர் சுரேந்திரன் வரவேற்று பேசினார். நாகர்கோவில் வட்டார முதுநிலை மேலாளர் பத்மராகம், எழுத்தாளர் மலர்வதியை பாராட்டி ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் காட்டாத்துறை பஞ்சாயத்து தலைவி ஜாக்குலின் ஜாண்பிரைட், வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவி செல்வராணி குமார், செறுகோல் பஞ்சாயத்து தலைவி கனகம் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி ஊழியர் லாசரஸ் நன்றி கூறினார்.
0 Comments: