
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சியில் ரேசன் முறையை பாதுகாக்க வலியுறுத்தி 5 கோடி கையெழுத்து இயக்கம்
மணவாளக்குறிச்சியில்
ரேசன் முறையை பாதுகாக்க வலியுறுத்தி
5 கோடி கையெழுத்து இயக்கம்
22-01-2013
மணவாளக்குறிச்சியில் மக்களுக்கு உணவளிக்கும் ரேசன் முறையை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 5 கோடி பேரின் கையெழுத்து இயக்கம் 20-01-2013 அன்று மாலை 5 மணி முதல் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளான புவனேந்திரன், ஜெயகுமார், பெரியவிளை கவுன்சிலர் ஜெயந்த், செல்லநாடான் உள்பட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளான புவனேந்திரன், ஜெயகுமார், பெரியவிளை கவுன்சிலர் ஜெயந்த், செல்லநாடான் உள்பட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மத்தியில் ஆளும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசாங்கம் தேசநலனுக்கு எதிராக கொள்கைகளை அமல்படுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியே தற்போது மத்திய அரசு அமல்படுத்த முயற்சிக்கும் உணவு பாதுகாப்பு திட்டம். இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ரேசன் கடைகளில் அரசி, சீனி, மண்ணெண்ணை என மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்கும் பதிலாக, இதற்கு மத்திய அரசு செலவிடும் பணத்தை மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் சேர்ப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இது வறுமைக்கோட்டிற்கு உள்பட்ட மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும், மற்றவர்களுக்கு கிடையாது.
ஏற்கனவே மத்திய அரசின் கொள்கைகளால் விலைவாசி விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ரேசன கடைகளில் இலவசமாய் அரிசி வழங்கும் சூழ்நிலையில் வெளிசந்தையில் அரிசி ரூ.35 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் இலவச அரிசி நிறுத்தப்பட்டால் எந்த அளவிற்கு அரிசி விலை உயரும் என்பது நமக்கு புரியாததல்ல.
‘உங்கள் பணம் உங்கள் கையில்’ எனும் கவர்ச்சிகரமான வார்த்தைகளால் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தினால் படிப்படியாக ரேசன் கடைகள்,உணவுப்பொருட்கள் கொள்முதல் நிலையங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடப்படும். இவற்றில் பணியாற்றுபவர்கள் வெளையிழப்பதோடு விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments: