
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி, தருவை பகுதியில் விளக்கு சரிந்து விழுந்து குடிசை வீடு எரிந்து சாம்பல்
மணவாளக்குறிச்சி, தருவை பகுதியில்
விளக்கு சரிந்து விழுந்து குடிசை வீடு எரிந்து சாம்பல்
21-12-2012
மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 57). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய வீடு ஓலையினால் வேயப்பட்ட கூரை வீடு ஆகும். நேற்று முன்தினம் இரவு இவர் சாமி படத்துக்கு குத்துவிளக்கு ஏற்றிவைத்து இருந்தார். எதிர்பாராத விதத்தில் அந்த குத்துவிளக்கு சரிந்து விழுந்தது.
இதனால் வீட்டில் தீப்பிடித்தது. இதில் குடிசை வீடு முழுவதும் தீ பரவியது. உடனடியாக இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீப்பிடித்த வீட்டிற்கு செல்ல ஒற்றையடி பாதை மட்டுமே உள்ளதால் தீயணைப்பு வண்டி உள்ளே செல்ல வழியில்லை.
![]() |
வீட்டில் இருந்த குத்துவிளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியது. அந்த குத்துவிளக்கு சரிந்து கிடக்கும் காட்சி |
![]() |
வீடு முழுமையாக எரிந்து கிடந்த காட்சி |
இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி எடுத்து தீயை அணைக்க போராடினர். இந்த விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. தீவிபத்தின் போது வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகை, கட்டில், துணிகள் மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் எரிந்தது.
![]() |
வீட்டில் பின்சாரம் கிடையாது. அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சி பெட்டியை வாங்கி வைத்திருந்தனர். தொலைக்காட்சி பெட்டி எரிந்து கிடந்த காட்சி |
![]() |
தீ மளமளவென்று எரிந்ததால் தென்னை மரம் தீயின் கருகியது |
தகவல் அறிந்ததும் மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி ராஜமணி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, செல்வமணி குடும்பத்துக்கு இலவச வேட்டி - சேலைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்.
![]() |
வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகி கிடந்த காட்சி |
![]() |
பையில் வாங்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் சில பொருட்கள் எரிந்து கிடக்கிறது |
0 Comments: