
Other News
21-ம் தேதி உலகம் அழிய வாய்ப்பில்லை: ஆராய்ச்சியாளர் பேட்டி
21-ந் தேதி உலகம் அழிய வாய்ப்பில்லை:
ஆராய்ச்சியாளர் பேட்டி
19-12-2012
மாயன் காலண்டர் முடிவுக்கு வருவதையொட்டி வருகிற 21-ந் தேதி உலகம் அழிந்து விடும் என்ற பீதி உலக அளவில் பரவியுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த புவி மற்றும் விண்வெளி குறித்த ஆராய்ச்சியாளர் பாபு காலயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 1994-ம் ஆண்டு முதல் பூமி மற்றும் விண்வெளியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உள்பட பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது சூரியனில் இருந்து கறுப்பு புள்ளிகள் பூமியை நோக்கி பயணிக்கின்றன.
கடந்த 1994-ம் ஆண்டு முதல் பூமி மற்றும் விண்வெளியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உள்பட பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது சூரியனில் இருந்து கறுப்பு புள்ளிகள் பூமியை நோக்கி பயணிக்கின்றன.
சூரியனில் இருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிர்களை இந்த கறுப்பு புள்ளிகள் மறைத்து விடுகின்றன. இதனால் பகல் நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படும். இது கடந்த 16-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை நிகழும். இவ்வேளையில் வானில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் மழைத்துளி போன்ற தண்ணீர் பூமியில் விழுகிறது. இது உடலில் படுவதால் அலர்ஜி ஏற்பட்டு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
சில வேளைகளில் நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, சூறாவளி போன்றவை நிகழ வாய்ப்புள்ளது. வருகிற 21-ந் தேதி உலகம் அழிய வாய்ப்பில்லை. இயற்கை சீற்றங்கள் நிகழும் பட்சத்தில் ஆங்காங்கே சில இழப்புகள் ஏற்படும். இதுகுறித்து அரசு மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments: