அரசியல் வாதிகளுக்கு தனிக்கல்லூரிகள்
13-12-2012
இந்தியாவில் எஞ்சினியர் ஆக வேண்டும் என்றால் 12 ஆம் வகுப்பு வரை படித்து ஜெயித்த
பின்னர், பொறியாளர் கல்லூரியில் சேர்ந்து படித்து ஜெயித்து பட்டம் பெற்ற பின்னரே எஞ்சினியர் ஆக முடியும்.
டாக்டராக வேண்டும் என்றால் 12 ஆம் வகுப்பு வரை படித்து ஜெயித்தால் மட்டும் போதாது அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், அது மட்டுமல்லாமல் நுழைவு தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே படிப்பறிவில் மிகவும் திறமை வாய்ந்தவர்களால் மட்டுமே மருத்துவ படிப்பு படித்து ஜெயித்து டாக்டராக முடியும்.
இதேபோல் நாட்டில் ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பலவகை உயர்ந்த பட்டப்படிப்புகளும், வக்கீல் படிப்பு, பி.ஏ, எம்.ஏ, எம்.பில், போன்ற பல வகையான படிப்புகளும், படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் படிப்புத்தகுதியை வைத்து தான் வேலைகளும் கிடைக்கிறது.
ஆனால் நம் நாட்டில் அரசியல் வாதிகளுக்கு மட்டும் எந்த கல்வித்தகுதியும் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. ஆகவே தான் அரசியலில் திறமையானவர்கள் எவரும் பணம் இல்லாததினால் அரசியல் பதவிகளில் வரமுடிவதில்லை.
எனவே அரசியல் வாதிகளுக்கும் கல்வித்தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும். 12 ஆம் வெற்றி பெற்ற பின்னர் அரசியல் படிப்பு படிப்பதற்கென்றே தனியாக கல்லூரிகள் அமைக்க வேண்டும். அரசியல் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற பின்னரே வேட்பாளராக போட்டியிட முடியும் என்ற சட்டம் உடனடி நாட்டிற்கு தேவை.
பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பிரதம மந்திரி வரை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் கல்வித்தகுதி நிர்ணயம் செய்து அந்தந்த பட்டம் பெற்றவர்களே, வேட்பாளராக போட்டியிட முடியும் என்ற சட்டமும் நாட்டிற்கு உடனடி தேவை.
எவ்வித தகுதியில்லாதவர்களும், பண பலத்தில் அரசியல் பதவிகளில் அமர்வதை தடை செய்வதற்காக அரசியல் வாதிகளுக்கு என்று தனித்தனி கல்லூரிகள் உருவாக்க வேண்டும். பி.ஏ, எம்.ஏ, என்ற படிப்புகள் போல் எம்.எல்.ஏ, எம்.பி, போன்ற அரசியலின் பல பதவிகளுக்கும் அரசியல் பட்டம் கட்டாயம் தேவை. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் வாருங்கள்.
என்றென்றும் மகிழ்வுடன், ஜஸ்டின்
0 Comments: