
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன்
இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்:
ஏராளமானோர் கலந்து கொண்டனர்
10-11-2012
மண்டைக்காட்டில் ஆலயம் கட்டும் முயற்சியை தடுக்கவும், சட்டமீறல் மதில் சுவரை அகற்றவும், மண்டைக்காடு கடல் பகுதியில் மீண்டும் மண்டைக்காடு என்ற பெயர் பலகை வைக்கவும், மாவட்டத்தில் அமைதியை காக்கவும், இந்துக்கள் சமஉரிமை பெறவும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன் நேற்று இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக லட்சுமிபுரம் மவுனகுரு சாமி மடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மண்டைக்காடு கோவிலை வந்தடைந்தது. பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் மிசாசோமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணதாஸ் அறிமுக உரை வழங்கினார். பா.ஜனதா ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன், மண்டைக்காடு பேரூராட்சி துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: