
குமரிமாவட்ட செய்திகள்
ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட நட்பால் விபரீதம்: 2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்
ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட நட்பால் விபரீதம்:
2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்
31-10-2012
தக்கலை அருகே உள்ள பொற்றவிளை கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். டெய்லர். இவரது மனைவி இந்திரா ராணி (வயது 37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் விபத்து ஒன்றில் சிக்கினார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்திரா ராணியும் அவருடன் தங்கி அவரை கவனித்து வந்தார். அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த கூடங்குளம் பெருமணல் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் என்பவருடன் இந்திரா ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாக மாறினர்.
இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு வருவதாக கூறி இந்திரா ராணி இளைய மகள் சஜனாவுடன் (11) வெளியில் சென்றார். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் புகார் செய்தார். புகாரில் தனது மனைவி இந்திரா ராணியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி ஆல்வின் கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். கணவர் போலீசில் புகார் செய்த தகவல் கிடைத்ததும் மகள் சஜனாவை மட்டும் ஒரு காரில் ஏற்றி இந்திரா ராணி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். புகாரின் பேரில் இந்திரா ராணியையும், ஆல்வினையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
0 Comments: