Headlines
அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ரண அறிவிப்பு
மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்த காலம்சென்ற பொன்னம்பெருமாள் அவர்கள் மகன் மணிகண்டன் (வயது 46). இவர் பந்தல் அமைக்கும் வேலை செய்து வந்தார். கடந்த சில நாள்களாக கடுமையாக நோயுற்றிருந்தார். 

இந்நிலையில் இவர் நேற்று (19-11-2012) அன்று மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். அன்னாரது உடல் இறுதிசடங்கு மாலை 4 மணி அளவில் நடந்தது.

மணவாளக்குறிச்சி முன்னாள் பா.ஜனதா பேரூர் தலைவர் மரணம்
மணவாளக்குறிச்சி முன்னாள் பா.ஜனதா பேரூராட்சி தலைவராக இருந்த ராமசந்திரன் அவர்கள் நேற்று முன்தினம் இரவு காலமானார். இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. அவருடை இறுதி சடங்கு நேற்று நடந்தது. இவர் மணவை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஆவார்.

பா.ஜனதா மாநில வழக்கறிஞரணி பொதுசெயலாளர் மணிகண்டன், விஸ்வகர்ம சமுதாய சங்ககமிட்டி உறுப்பினர் சுரேந்திரன், பா.ஜனதா உறுப்பினர்கள் கார்த்திகேயன், வெங்கடாசலம், நாராயணன் தம்பி, ஆசிரியர் ராஜ்குமார், வேளாண்மை விற்பனை துறை விஜயகுமார், முன்னாள் பா.ஜனதா தலைவர் ஜெயக்குமார், மணவை பா.ஜனதா தலைவர் செல்வேந்திரன், பா.ஜனதா இளைஞரணி தலைவர் பிரகலாதகண்ணன் ஆகியோர் அன்னாரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: