District News
இனயம் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
குமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கி யுள்ளது. இதைத்தொடர்ந்து, துறைமுகம் அமைப்பதற்காக ஆயத்தக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக உண்ணாவிரதம், கடையடைப்பு, கருப்பு கொடி கட்டுதல் போன்ற பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் மீனவர்கள் மட்டுமின்றி, கரைப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சின்னத் துறை மீனவ கிராம மக்கள் சார்பில் துறைமுகத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சின்னத்துறை சந்திப்பில் நேற்று உண்ணா விரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பங்குத் தந்தை சாபின்லீன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லசாமி, குளச்சல் நகரசபை முன்னாள் தலைவர் ஜேசய்யா, தூத்தூர் மீனவர் கூட்டமைப்பு சங்க தலைவர் ஜோஸ் பில்பின் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments: