Manavai News
மணவாளக்குறிச்சி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
மணவாளக்குறிச்சி அருகே பாலாற்றின்கரையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை கோவிலுக்கு சென்றவர்கள், முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்தது கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தார்.
இந்த சம்பவம் குறித்து ஊர்தலைவர் சுபாஷ் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments: