
சுற்றுவட்டார செய்திகள்
திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா
திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா
27-12-2015
திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதி (மார்கழி 9, 10) ஆகிய தேதிகளில் நடந்தது.
முதல் நாள் திருவிழாவில் காலை 4.30 மணிக்கு திருக்கோவில் நடைதிறப்பு மற்றும் நிர்மால்ய தரிசனம் நடந்தது. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. இந்நிகழ்ச்சியை மாத்தூர் மடம் சுப்பிரமணியரு தந்திரி, பூஜ்யஸ்ரீசக்தி சைதன்யானந்த் மகராஜ் மற்றும் சஜித் சங்கர நாராயணகுரு ஆகியோர் நடந்தினர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு நவகார அபிஷேகமும் காலை 10 மணிக்கு பேச்சு போட்டி நிகழ்ச்சியும் நடந்தது.
பேச்சுபோட்டியில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை அன்னை சாரதா தேவியார் என்ற தலைப்பிலும், 5-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை வீரத்துறவி விவேகானந்தர் என்ற தலைப்பிலும், 7 முதல் 9 வரை ஆன்மீக எழுச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை நான் விரும்பும் சிவனடியார் என்ற தலைப்பிலும், கல்லூரி மற்றும் ஆசிரியர்களுக்கு "அர்த்தமுள்ள இந்து மதம்" என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டிகள் நடந்தன.
மதியம் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 3 மணிக்கு மாபெரும் கோலப்போட்டி நடந்தது. மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. மாலை 5 மணிக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 6 மணிக்கு மாபெரும் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு பாட்டு போட்டியும், இரவு 8 மணிக்கு மகளிர் மாநாடும் நடைபெற்றது. இதற்கு மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார்.
0 Comments: