Headlines
Loading...
குளச்சல் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு

குளச்சல் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு

குளச்சல் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு
25-12-2015
குளச்சலை அடுத்த பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் மரிய வினான்சியஸ். கட்டிட தொழிலாளி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மலர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்மலர் குடும்ப செலவுக்காக திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1½ லட்சம் பணம் கடன் வாங்கியிருந்தார். 3 மாதங்களுக்கு முன்பு வாங்கிய இந்த பணத்திற்கு இதுவரை அவர் வட்டி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் பணம் கொடுத்தவர் அதனை திருப்பி கேட்டு பொன்மலரை மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த பொன்மலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்மலர் பரிதாபமாக இறந்து போனார். இது பற்றி வெளிநாட்டில் தங்கி இருந்த பொன்மலரின் கணவர் மரியவினான்சியசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ஊருக்கு திரும்பி வந்தார். மனைவியின் உடலை பெற்று இறுதிசடங்குகள் செய்தார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்து இரு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய மரியவினான்சியஸ் வீட்டில் இருந்த சில நகைகளையும் மனைவி அணிந்திருந்த தாலி செயினையும் காணவில்லை என அறிந்தார். உடனே அவர் இது பற்றி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

அதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த போது மனைவி பொன்மலர் 9 பவுன் தாலிசெயின் அணிந்திருந்தார். அதன்பிறகு வெளிநாடு சென்ற பின்பு அவருக்கு 2 காப்புகள் மற்றும் ஒரு தங்க பிரேஸ்லெட் அனுப்பி கொடுத்தேன். இப்போது ஊருக்கு வந்து பார்த்த போது அந்த நகைகள் எதுவும் இல்லை. இது பற்றி பொன்மலர் எழுதி வைத்த குறிப்புகள் மட்டுமே உள்ளது. இந்த நகைகள் மாயமான விவகாரத்தில் மனைவியின் உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் குளச்சல் போலீசார் பொன்மலரின் தாயார் ராஜகுமாரி(55), சகோதரி சரோஜினி(28), சரோஜினியின் கணவர் அய்யப்பன்(31) மற்றும் திங்கணங்கோட்டைச் சேர்ந்த அமல்ராஜ்(48) ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் போலீஸ் நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதன்பிறகு சரல் விளையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற பொன்மலரின் தாயார் ராஜகுமாரி இன்று காலை கண்விழித்து வெளியே வரவில்லை. வீடும் நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு ராஜகுமாரி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் விரைந்துச் சென்று பார்த்த போது ராஜகுமாரி இறந்திருந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜகுமாரி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. கந்துவட்டி கொடுமைக்காக பொன்மலர் உயிரை மாய்த்து கொண்ட 4 நாட்களிலேயே அவரது தாயாரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: