
Manavai News
மணவாளக்குறிச்சி, ஆண்டார்விளையில் அங்கன்வாடி திறப்புவிழா: பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
மணவாளக்குறிச்சி, ஆண்டார்விளையில் அங்கன்வாடி திறப்புவிழா: பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
31-08-2015
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளையில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா தலைமை தாங்கினார்.
வார்டு உறுப்பினர்கள் ஐயப்பன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிடத்தை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் லிசி, வட்டாரத்தலைவர் கிளாட்சன், வார்டு உறுப்பினர்கள் திலகவதி, ஆஸ்டின், சகாயராஜ், பேரூர் தலைவர் தனிஸ், குற்றாலம், சேகர், மத்தியாஸ், அன்சாரி, அப்துல்மஜீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: