மணவாளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை
17-07-2015
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பியதுடன், பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. கடந்த 2 வாரங்களாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று காலை முதலே வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. இரவும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதைதொடர்ந்து நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. காலையில் லேசாக மழை பெய்தது. காலை சுமார் 7.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாது சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து சாரல் மழை அவ்வப்போது பெய்தது.
இதேபோல் மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை கொட்டி வருகிறது. இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது. தற்போது மழை லேசான தூறலுடன் பெய்து வருகிறது. தொடர்ந்து வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மழை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photos
Dyson M.A., B.Ed., M.Phil.
Manavalakurichi
0 Comments: