Headlines
Loading...
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்-பயணிப்பவர் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்-பயணிப்பவர் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்-பயணிப்பவர் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
18-06-2015
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், விபத்தில் சிக்கும் பட்சத்தில் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் பற்றி கடந்த 8-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் அவர் கூறி இருந்ததாவது:- 50 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமலேயே இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். அனைவரது வாழ்வுரிமையையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும் உள்ளது. ஆனால் ஹெல்மெட் அணியாததற்கு வெறும் அபராதங்களை மட்டுமே விதிப்பதால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை. இருசக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால், அவர் ஹெல்மெட் வாங்கும் வரை அவரது ஓட்டுனர் உரிமம் உள்பட வாகன ஆவணங்களை முடக்க வேண்டும்.

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் வருகிற ஜூலை 1-ம் தேதியில் இருந்து கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டுமென்பதை, 18-ம் தேதிக்குள் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஜூலை 1-ம் தேதியில் இருந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் உள்பட அந்த வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் முடக்கப்படும் என்ற தகவலையும் அறிவிக்க வேண்டும்.

புதிய ஹெல்மெட்டை வாங்கி அதையும், அதற்கான ‘பில்’லையும் காட்டிய பிறகு தான் அந்த ஆவணங்கள் திருப்பித்தரப்படும் என்பதையும் தகவலாக மக்களுக்கு கூற வேண்டும். இந்த உத்தரவை 18-ம் தேதிக்குள் இரண்டு பேரும் நிறைவேற்றாவிட்டால் 19-ம் தேதி கோர்ட்டு விசாரணைக்கு இருவரும் ஆஜராக வேண்டியது இருக்கும். இவ்வாறு அவர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கி தமிழக அரசு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் (உள்துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1.7.2015 முதல் இரு சக்கர வாகன ஓட்டுனர் மற்றும் பயணிப்பவர் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகன சட்டம்-1988, பிரிவு 206-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனரின் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும்.

இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: