
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சலில் பலத்த சூறைக்காற்று: வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
குளச்சலில் பலத்த சூறைக்காற்று: வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
27-04-2015
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பலத்த சூறைகாற்று வீசியதில் குளச்சல், ஆலஞ்சி, இரும்பிலி, ரீத்தாபுரம், ஈத்தம்பாடு உள்பட பல பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.
இந்தநிலையில் நேற்று குளச்சல் கடலில் சூறைகாற்று வீசியது. ஆனாலும் சில மீனவர்கள் வழக்கம் போல் வள்ளம், கட்டுமரங்களில் மீன் பிடிக்க புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் கடலில் சூறைக்காற்று பலமாக வீசியது. இதனால் அவர்களால் படகுகளில் செல்ல முடியவில்லை. உடனே மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்தனர்.
இதைத்தொடர்ந்து குளச்சல் கடற்கரையில் இருந்து வள்ளம், கட்டுமரத்தில் கடலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், தங்கள் படகுகளை கரையிலேயே பாதுகாப்பாக கட்டி வைத்தனர். சூறை காற்றால் குளச்சலில் உள்ள மீன் ஏல மையத்தின் மேற்கூரை பெரும் சேதம் அடைந்தது. குமரி மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
0 Comments: