
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளமடி, ஈசன்தங்கு பகுதியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
வெள்ளமடி, ஈசன்தங்கு பகுதியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
22-01-2015
வெள்ளமடி அருகே உள்ள ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன்
(வயது 37). ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், இவர் மனைவி சிவகாமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதுதொடர்பாக நாகர்கோவில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக மனவருத்தத்தில் சிவசந்திரன் அடிக்கடி குடிக்க ஆரம்பித்தார். சம்பவத்தன்று (19-ம் தேதி) மாலையில் சிவசந்திரன் தலை வலிக்கிறது என்று கூறியுள்ளதாக தெரிகிறது. ,உடனே அவரது தம்பிகள் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக கொண்டு சேர்ந்தனர்.
பின்னர் மேல்சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிட்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து சிவசந்திரன் தாயார் காசித்தங்கம் வெள்ளிசந்தை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், இளங்கோ ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
0 Comments: