
Manavai News
மணவாளக்குறிச்சியில் பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் சாவு
மணவாளக்குறிச்சியில் பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் சாவு
14-01-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளையை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் சதீஷ்(வயது 20). இவர் கணபதிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை 9 மணிக்கு இவர் மணவாளக்குறிச்சியில் இருந்து கல்லடி விளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கல்லூரி பஸ் சதீஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு சதீஷ் படுகாயம் அடைந் தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மணவாளக் குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக் டர் ஆதிலிங்க போஸ், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் பஸ்சை மீட்டனர்.
0 Comments: