Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளை மீனவர் வலையில் “சூரை, வேளா, பாரை” மீன்கள் சிக்கின: வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
மணவாளக்குறிச்சி, சின்னவிளை மீனவர் வலையில் “சூரை, வேளா, பாரை” மீன்கள் சிக்கின: வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
29-11-2014
மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமம் சின்னவிளை. இங்கு ஏராளமான மீனவர்கள் கட்டுமரம், வள்ளம், சிறிய மிஷின் வைத்த படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்கள் வரத்து குறைந்திருந்த நிலையில் இன்று அதிகளவு மீன்கள் கிடைத்தது.
சின்னவிளை பகுதியை சேர்ந்த ஆஸ்டின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் இன்று அதிகளவு மீன்கள் கிடைத்தன. இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கடற்கரையில் கொண்டு வரப்பட்ட வள்ளத்தில் இருந்து குவியல் குவியலாக சூரை, பாரை மற்றும் வேளா மீன்கள் இருந்தது. தகவல் அறிந்தவுடன் வியாபாரிகளுடன், பொதுமக்களும் கடற்கரையில் கூடிவிட்டனர்.
வெளி ஊர்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வாகனங்களில் வந்து மீன்களை வாங்கி சென்றார். உள்ளூர் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0 Comments: