Manavai News
மணவாளக்குறிச்சியில் குரங்குகளின் படையெடுப்பு
மணவாளக்குறிச்சியில் குரங்குகளின் படையெடுப்பு
29-11-2014
மணவாளக்குறிச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஒரு குரங்கு தென்பட்டு வந்தது. இந்த குரங்கு மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதி, சின்னவிளை ரோடு, வடக்கன்பாகம் ஆகிய பகுதிகளில் தாவித்தாவி சென்று வந்தன. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்து வந்தனர். ஆனால் இந்த குரங்கு பொதுமக்களை தொந்தரவு செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று திடீரென சந்திப்பு பகுதியில் சிலர் குரங்கு, குரங்கு என சத்தம் போட்டபடி நின்றனர். அப்போது, அந்த பகுதியில் 3 குரங்குகள் கடைகளின் மீது ஏறி தாவி சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த 3 குரங்குகளும் ஒரு கடையின் அருகில் உள்ள மாடிப் படியில் ஏறி இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அவைகளை செல்போனில் படம் படித்தனர். அருகில் கடையில் இருந்தவர், குரங்குகள் கடையினுள் வந்துவிடக்கூடாதே, என்ற பயத்தில் பதைபதைப்புடன் நின்றார்.
இளைஞர்கள் சிலர் குரங்குகளின் பக்கத்தில் சென்று பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒரு குரங்கு எல்லோரையும் பார்த்து உர்...உர்... என்று சத்தம் போட்டது. சிறுது நேரத்தில் குரங்குகள் அங்கிருந்து தாவி குதித்து வேறு இடத்திற்கு சென்றது. இதனால் அந்த பகுதி சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.
0 Comments: