சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறி தங்கத்தை கரைத்து மோசடி
மணவாளக்குறிச்சி அருகே நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறி தங்கத்தை கரைத்து மோசடி
31-10-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கோவிலான்விளையை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவராணி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் இவரது மகள் ரதிமோள் (வயது 18). இருந்தார். அப்போது வடநாட்டு தோற்றம் கொண்ட 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ரதிமோளிடம் நாங்கள் நகைகளுக்கு பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறோம். வெள்ளி கொலுசை தந்தாள் பாலீஷ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
உடனே ரதிமோள் தனது காலில் கிடந்த வெள்ளிகொலுசை பாலீஷ் போட கொடுத்துள்ளார். அந்த வாலிபர்கள் பாலீஷ் போட்டு கொலுசை பளிச் என்று கொடுத்தனர். பின்னர் அவர்கள் வேறு தங்க நகைகள் இருந்தாலும் கொடுங்கள் பாலீஷ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளனர். உடனே ரதிமோள் கையில் கிடந்த பிரேஸ்லெட், கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயின் ஆகியவற்றை கழற்றி கொடுத்துள்ளார்.
பின்னர் நகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு பாலீஷ் செய்து கொடுத்துள்ளனர். நகைகளை ரதிமோள் வாங்கி பார்த்தபோது நகைகள் கலர் மாறி இருந்தது. உடனே அவர்களிடம் விசாரிக்க சென்றார். அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் ரசாயனம் மூலம் தங்கத்தை கரைத்து எடுத்துள்ளனர். இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வேலப்பன் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து 2 வடநாட்டு வாலிபர்களை தேடிவருகிறார்.
0 Comments: