விக்டரி கட்சியின் கோரிக்கைகள்
05-09-2013
1. அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் மட்டுமே கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்.
2. அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்குவதற்கு மட்டுமே அரசு சலுகைகள் வழங்கவேண்டும்.
3. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஐம்பதாக குறைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசாங்க வேலை வழங்க வேண்டும். ஒருவருக்கு மேல் வேலை பார்ப்பவர்களை வேலையிலிருந்து உடனடி நீக்க வேண்டும்.
5. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே, அரசாங்க வேலை வழங்க வேண்டும்.
6. பொது மக்களுக்கு அரசால் வினியோகம் செய்யும் குடிநீரை மட்டுமே அரசு அலுவலகங்களிலும் குடிநீராக பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும்.
7. அரசு அலுவலகங்களிலுள்ள பழைய வாகனங்கள் முதலான பழைய பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் நீக்கிவிட வேண்டும்.
8. பணியின்போது அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும்.
9. இந்தியாவின் வட்டிக்கடன் முற்றிலும் அடைத்து தீரும் வரை அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை இனி உயர்த்தக்கூடாது.
10. அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பொது மக்களுக்கு அமர இருக்கை வசதிகள் உடனடி செய்து தரப்பட வேண்டும்.
தகவல்:-
இந்தியன் விக்டரி கட்சி
கன்னியாகுமரி
0 Comments: