
மணவை செய்திகள்
புதுப்பொலிவுடன் மணவாளக்குறிச்சி பேருந்து நிலையம்
புதுப்பொலிவுடன் மணவாளக்குறிச்சி பேருந்து நிலையம்
09-12-2012
மணவாளக்குறிச்சி சின்னவிளை சாலையில், மின்சாரவாரிய அலுவலகம் அருகில் கட்டப்பட்டு வருகிறது புதிய பேருந்து நிலையம். இதற்கான இடத்தை ஒப்பந்த அடிப்படையில் மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான இந்திய அரிய மணல் ஆலை, மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு கொடுத்துள்ளது. பேருந்து நிலைய பணிகள் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது. தற்போது, மேலும் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு வருகிறது.
![]() |
பேருந்து நிலைய நுழைவாயிலின் தோற்றம் |
பேருந்து நிலையத்தில் நுழைவாயில் புதிய பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. பேருந்துகள் வந்து நிற்கும், பேருந்து நிறுத்த அமைப்புகள், பயணிகள் நிழலகங்கள். ஓய்வு அறைகள், பேருந்து நேர குறிப்பாளர் அலுவலகம், நவீன கழிவறைகள் போன்றவைகள் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து பணிகளும் ஏறத்தாழ முடியும் தருவாயில் உள்ளது.
![]() |
பயணிகள் நிழலகம் மற்றும் பேருந்து நிற்கும் இடம் |
![]() |
புதிதாக கட்டப்பட்ட கழிவறைகள் |
![]() |
சமய குறிப்பாளரின் அலுவகலம் |
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், மணவாளக்குறிச்சி பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்காக காத்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் மணவாளக்குறிச்சி சந்திப்பு வந்து செல்லும் அனைத்து பேருந்துகளுமே, பேருந்து நிலையம் வந்து செல்லும் என தெரிகிறது.
You may like the blog privatejobshub
ReplyDelete