
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி – கடியப்பட்டணம் சாலையில் 2 புதிய பாலங்கள் கட்டப்படுகிறது போக்குவரத்து மாற்றம்
மணவாளக்குறிச்சி – கடியப்பட்டணம் சாலையில்
2 புதிய பாலங்கள் கட்டப்படுகிறது
போக்குவரத்து மாற்றம்
மணவாளக்குறிச்சி பாலம் அருகே கடியப்பட்டணம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை மணவாளக்குறிச்சியில் இருந்து கடியப்பட்டணம் செல்ல மிக முக்கிய சாலை
ஆகும். இதில் தினமும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை
மழைகாலங்களில் மிகவும் சேதமடைந்து காணப்படுவதுடன், ரோடு குண்டும் குழியுமாக
இருக்கும். இதனால் மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கடியப்பட்டணம் செல்லும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை
துறை சாலையை சீரமைத்து, சிறு ஓடைகள் உள்ள 2 இடங்களில்
பாலங்கள் கட்டவும் தீர்மானித்தது. இதனால் மணவாளக்குறிச்சி பாலம் பகுதியில் இருந்து
செல்லும் சாலையில் கல்லடிவிளை பகுதி பாலத்திற்கு முன்னால் உள்ள 2 ஓடைகளில்
சிறு பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 3 வாரங்களாக
நடைபெற்றது வருகிறது. பாலப்பணி விரைவில் முடிவடையும் என தெரிகிறது.
இந்த
பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த சாலை வழியாக கடியப்பட்டணம் சென்று வந்த
அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் சென்று வருகின்றன. அதை தொடர்ந்து அரசு
பேருந்துகள் அம்மாண்டிவிளையில் இருந்து முட்டம் சென்று, அங்கிருந்து கடியப்பட்டணம்
செல்கின்றன.
0 Comments: