
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்: மீனவர் பலி
மண்டைக்காடு அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்:
மீனவர் பலி
20-11-2012
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் அமலரிச்சலோன் (வயது23). மீனவர். அவர் நேற்று மண்டைக்காடு புதூரில் இருந்து கோடிமுனைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொட்டில்பாடு என்ற இடத்தில் அவர் மோட்டார்சைக்கிளில் வந்தபோது, எதிரே கடியபட்டணத்தை சேர்ந்த ஜஸ்டின் ஜெயசிம்மன் (47) மோட்டார்சைக்கிளில் வந்தார். எதிர்பாராமல் 2 மோட்டார்சைக்கிள்களும் எதிர், எதிரே பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதனால் படுகாயம் அடைந்த அமலசிச்சலோன சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அமலரிச்சலோன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜஸ்டின்ஜெயசிம்மன் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments: