மணவாளக்குறிச்சி
முஸ்லீம் முஹல்ல பள்ளிவாசலில்
திருநபிதின விழா
நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி
05-02-2012
மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்ல பள்ளிவாசலில் ரபிஉல் அவ்வல் மாதம் 1ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தினமும் இரவு தொழுகைக்கு பின்னர் நேர்ச்சை வழங்கும் விழா நடைபெற்றது. மிலாது நபி திருவிழாவான இன்று (05-02-2012) பெரிய அளவில் நேர்ச்சை வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. காலை 8.00 மணி முதல் நேர்ச்சை வழங்குவது ஆரம்பமானது. அனைத்து மக்களும் வரிசையில் நின்று நேர்ச்சை வாங்கி சென்றனர்.
முஹல்ல நிர்வாகிகள் நேர்ச்சையை சிறப்புடன் வழங்கினர். இஸ்லாமிய இளைஞர் பேரவை நிரவாகிகளும் கலந்து கொண்டு பலவிதமான உதவிகளையும் வழங்கினர். மிலாது தின நேர்ச்சை மணவாளக்குறிச்சி பாப்புலர் ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.
 |
மணவாளக்குறிச்சி சந்திப்பில் பள்ளிரோட்டில் வைக்கப்பட்ட
வரவேற்பு வளைவு |
 |
நேர்ச்சை வாங்க செல்லும் முஹல்லவாசிகள் |
 |
நேர்ச்சை வழங்குவதற்காக அண்டாவில் கொண்டுவரப்படுகிறது |
 |
நேர்ச்சை வழங்க தயார் நிலை |
 |
முதல் நேர்ச்சை வழங்க, அளவு பாத்திரத்தில் முஹல்ல தலைவர்
நேர்ச்சை நிரப்பும் காட்சி |
 |
முதல் நேர்ச்சை வழங்கப்படுகிறது |
 |
நேர்ச்சை வழங்கும் பணியில் ஈடுபட்டோர் |
 |
கறிகள் பார்சல் செய்யப்படுகிறது |
 |
நேர்ச்சை வழங்க ஆரம்பித்த காலை 8 மணிக்கு
நேர்ச்சை வாங்க வந்தவர்கள் |
 |
காலை 8.30 மணிக்குநேர்ச்சை வாங்க
வந்தவர்களின் நீண்ட வரிசை |
 |
மண்டபத்தின் வெளியே செல்லும் நீண்ட வரிசை |
 |
நேர்ச்சை டோக்கன் சரிபார்க்கப்படுகிறது |
 |
நேர்ச்சையை கொண்டுவரும் இஸ்லாமிய இளைஞர்
பேரவை உறுப்பினர்கள் |
 |
நேர்ச்சை வழங்கும் காட்சி |
புகைப்படங்கள் "மணவை மலர்"
0 Comments: