Manavai News
முட்டம் சுற்றுலாதலத்தின் அழகிய காட்சிகளும் - அவல காட்சிகளும்
முட்டம் சுற்றுலாதலத்தின் அழகிய காட்சிகளும் - அவல காட்சிகளும்
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டம் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு சுற்றுலாதலங்களை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முட்டம் கடற்கரை பகுதி பெரும்பாலோனரின் மனதை கொள்ளைகொண்ட அழகிய பகுதி. பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமாகவும் உள்ளது. ஆனால் இங்கு பல அழகிய காட்சிகள் இருந்தாலும், மனிதர்களால் ஏற்படும் அவலங்களும் நடக்கிறது. அது பற்றிய ஒரு புகைப்பட காட்சிகளுடன் செய்திகள்...
முட்டம் அழகிய கடற்கரை நம்மை வரவேற்கும் காட்சி தூண்
முட்டம் கடல் பகுதிக்கு செல்லும் பாதை, அரசால் அழகுடன்
கட்டப்பட்ட பாதை
அரசால் கட்டப்பட்ட சுற்றுலா பயணியர் விடுதிகள்
கடற்கரைக்கு செல்ல முட்புதர்கள் வெட்டப்பட்டு படிகள்
அமைக்கப்பட்ட நடைபாதை
சூரியன் மறைவதை காணும் பொருட்டு கம்பி வேலி போடப்பட்ட
பெரிய பாறை
கடற்கரையின் அழகிய தோற்றம்
கடற்கரையில் சீராக தோன்றும் கடல் அலைகள்
சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக உடைகள் மாற்றும் அறைகள்
முட்டம் கடற்கரை பாறைகள் மிகுந்த பகுதியானதால் கடலை பார்வையிடும்
போது கவனமுடன் இருக்குமாறும், கடல் அருகில் உள்ள பாறைகளுக்கு
யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தும் பலகை
பாறையில் ஏறி கடலை ரசிப்பவர்கள் கடலின் அருகில் செல்லாமல்
இருக்க வேண்டி கம்பி வேலி தடுப்பு போடப்பட்டுள்ளது
கம்பி வேலி தடுப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள்
கடலின் அருகில் செல்வதால் விபத்து நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது
விபத்துகள் நடக்கும் பாசி படர்ந்த பாறை. இதில் சுற்றுலா பயணிகள்
செல்வது தடைபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சில அறிவு ஜீவிகள்
இங்கு சென்று தன் வீரத்தை காட்டுகிறது. காவலர்களின் கண்ணில் படும்போது விரட்டியடிக்கபடுகின்றனர்.
பாறைகள் சூழ்ந்த பகுதி, தடுப்பு கம்பி உடைந்து காணப்படுகிறது.
ஆபத்து நிறைந்த பகுதி
இந்த பாறையின் மீது அமர்ந்து கடலை ரசிப்பது மிகவும் சுவராசியமானது
கடற்கரை பகுதிக்கு வரும் பாதை
அரசால் கட்டப்பட்ட நவீன கழிப்பறைகள்
சுற்றுலா பயணிகளுக்காக முட்டம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம்
கட்டப்பட்ட கடைகள். பயன்பாட்டிற்கு வராமல் பொலிவிழந்த தோன்றம்.
கதவுகள் உடைந்து காணப்படுகிறது
முட்டம் பகுதிக்கு மக்கள் பெரும்பாலும் தனியார் வாகனங்களிலேயே
வருகின்றனர். ஏனெனில் அரசு பேருந்து அடிக்கடி கிடையாது. ஊர் மக்களும்
பக்கத்துக்கு ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்
பயன்பாட்டிற்கு வராமல் போன பயணியர் விடுதி. தற்போது சமுக விரோதிகளின் கூடாரமாக உள்ளது
கடற்கரை பக்கத்தில் வள்ளங்கள் செய்ய அமைக்கப்பட்டுள்ள தொழில் கூடம்
எப்போதாவது வரும் பேருந்துகள்
பயணிகள் விடுதியின் அவல நிலை. உடைந்த போதை பாட்டில்களும்
சாப்பாடு பொட்டல கவர்களும் கிடப்பதால் கெட்ட வாசம் வீசுகிறது
பயணியர் விடுதியின் மேல் மாடியில் இருந்து எடுத்த புகைப்படம்.
பக்கத்தில் அமைந்துள்ள மற்ற இரண்டு பயணியர் விடுதிகள்
பயணியர் விடுதியில் இருந்து முட்டம் கடலை அழகாக ரசிக்கலாம்.
ஓய்வு அறைகள்
இங்கு பூட்டி இருக்கும் அறையில் முன்னர் ஒரு காவலாளி இருந்தார்.
தற்போது அவரும் மாயமாகி விட்டார்.
மாவட்ட கலெக்டரும், மத்திய அமைச்சரும் பல அரசியல் தலைவர்களும் வந்து முட்டம் கடற்கரையை அழகுபடுத்திய பின்னர் திறந்த போது அமைக்கப்பட்ட கல்வெட்டு
0 Comments: