Manavai News
மணவாளக்குறிச்சி பகுதியில் இளம்பெண் தற்கொலை
மணவாளக்குறிச்சி பகுதியில் இளம்பெண் தற்கொலை
25-11-2014
மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி லட்சுமி தங்கம் (வயது 33). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 7 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். லட்சுமி தங்கம் அதே பகுதியில் உள்ள தனது தாயார் சுயம்பு தங்கம் வீட்டில் வசித்து வந்தார். லட்சுமி தங்கம் மனநலம் பாதித்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை லட்சுமி தங்கம் வீட்டு முன் நின்ற மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: