Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி பலியான மீனவர் குடும்பத்துக்கு, நிவாரண நிதி ரூ.1½ லட்சம் தாசில்தார் வழங்கினார்

16-11-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கீழமுட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 37). மீனவர். இவர் நேற்று முன்தினம் ஜான்சன், சிலுவைபிள்ளை ஆகியோருடன் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றார். அப்போது மின்னல் தாக்கி ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.
இறந்த மீனவர் ஜோஸ் குடும்பத்துக்கு, முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1½ லட்சம் வழங்கப்பட்டது. மீனவர் ஜோஸ் மனைவி மேரி நிர்மலாவிடம், கல்குளம் தாசில்தார் நாகேந்திரா காசோலையை வழங்கி னார். அப்போது குளச்சல் வருவாய் ஆய்வாளர் நாகேஸ்வரி, கடியப்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி தங்கதுரை, முட்டம் ஊராட்சி தலைவர் மரிய ரூபன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: